அசுரகணம்

Author: க.நா. சுப்ரமண்யம்
Format: Paperback
Pages: 112
ISBN: 9789382648574
Language: Tamil
Publisher: நற்றிணைப் பதிப்பகம்
Release Date: December 01, 2011
க.நா.சு நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்தது அசுரகணம். அசுரகணங்ளின் மீது மனித மனம் கொண்டிருக்கும் அலாதியான கவர்ச்சியை அற்புதமாக வசப்படுத்தியிருக்கும் நாவல்.
இப்படைப்பி்ல் புறநிகழ்வுகள் வெகு சொற்பம்.மன நிகழ்வுகளால் கட்டமைக்கப்பட்டிருக்கும் நாவல். அசாதாரணமாவன், விசித்திரமானவன், சிந்தனையாளன் என்றெல்லாம் தன்னைக் கருதிக்கொள்ளும் ஒரு இளைஞனிடம் கழித்துச் சுழன்றோடும் சுபாவமான எண்ண ஓட்டங்களில் இப்படைப்பு உருப்பெற்றிருக்கிறது. ஒரு நிகழ்வின் அடியாக ஓர் எண்ணம்எழுந்து, அது அதன் எல்லா பக்கங்களிலும் விரிந்து, பரவி வியாப்பிகிறது.
மனித மனத்தில் எவ்வித பிரயாசைகளுமின்றி ஓயாது அலையடித்துக்கொண்டிருக்கும் எண்ணங்களின் பிரவாகத்தை அகப்படுத்தும் ஆற்றல் கொண்ட ஓரே கலை வடிவம் நாவல். ஒரு சாதனத்தின் தனித்துவமிக்க சிறப்பம்சத்தில் உயிர் கொள்ளும் படைப்புதான் அச்சாதனத்தின் உச்சங்களைத் தொடுகிறது. இவ்வகையில் தமிழின் மிகவும் குறிப்பிடத்தகுந்த நாவல்களில் ஒன்று அசுரகணம்.
- சி.மோகன்